×

ஒயிட்வாஷ் ஆனது வங்கதேசம் நியூசி. ஹாட்ரிக் அசத்தல்

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியிலும் தோல்வியைத் தழுவிய வங்கதேசம், 3-0 என்ற கணக்கில் தொடரை இழந்து ‘ஒயிட்வாஷ்’ ஆனது. நியூசி.யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் தலா 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள், டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் 2 ஒருநாள் போட்டியிலும் அபாரமாக வென்ற நியூசிலாந்து 2-0 என முன்னிலை வகிக்க, கடைசி  ஒருநாள் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. முதலில் களம் கண்ட நியூசி. 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 316 ரன் குவித்தது. நடப்புத் தொடரில் அறிமுகமான டெவோன் கான்வே 126 ரன் (110 பந்து, 17 பவுண்டரி), டாரில் மிட்செல் 100* ரன் (92 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.

அடுத்து 317 ரன் எடுத்தால் ஆறுதல் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேசம் 42.4 ஓவரில் 154 ரன்னுக்கு சுருண்டது. கடைசி வரை போராடிய மகமதுல்லா  76 ரன்னுடன் (73 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசி. பந்துவீச்சில் நீஷம் 5, மாட் ஹென்றி 4 விக்கெட் எடுத்தனர். நியூசி. 164 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்திய நியூசி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை கான்வே தட்டிச் சென்றார். முதல் டி20 போட்டி ஹாமில்டனில் நாளை நடக்கிறது.



Tags : Whitewash ,Bangladesh News , Whitewash became Bangladesh News. The hat trick is ridiculous
× RELATED ஒயிட்வாஷ் முனைப்பில் பாகிஸ்தான்: ஆறுதல் வெற்றி பெறுமா ஆப்கான்?