சென்னையில் ஜெ.பி.நட்டா பிரசாரம்

சென்னை: சென்னையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று மாலை பூக்கடை என்எஸ்சி போஸ் சாலையிலிருந்து திறந்தவெளி ஜீப்பில் பிரசாரம் மேற்கொண்டார் . அப்போது தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு சௌகர்பேட்டை தங்கசாலை மணிக்கூண்டு வரை சென்றார். பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று ஹிந்தியில் பேசிக்கொண்டு கையசைத்து சென்றார். பின்னர் அவர் பேசியதாவது: பாஜ தான் தமிழகத்துக்கு 11 மருத்துவ கல்லூரி வருவதற்கு அனுமதி கொடுத்தது. அதேபோல் ஜல்லிகட்டு தடையை நீக்கியது பாஜ தான். துறைமுகம் தொகுதியின் பாஜ வேட்பாளர் வினோஜை வெற்றி பெற வைக்க வேண்டும். அதே போல் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். பாஜ வேட்பாளர்கள் ஜெயித்தால், கட்ட பஞ்சாயத்து என்பது இல்லாமல் இருக்கும். தாமரை சின்னத்தில் வாக்களித்து பாஜ வேட்பாளர் வெற்றி பெற செய்யுங்கள் என்று பேசினார்.  பிரசாரத்தின் போது பாஜ தொண்டர்கள் பெருமளவில் வந்ததால் சவுகார்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Related Stories: