×

ஆவணமின்றி கொண்டு சென்ற 260 கிராம் தங்க நகைகள் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி

தண்டையார்பேட்டை: பிராட்வே பேருந்து நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், காரில் ஆவணமின்றி ெகாண்டு சென்ற 260 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  சட்டமன்ற தேர்தலை  முன்னிட்டு நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று மதியம் பிராட்வே பேருந்து நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி லோகேஷ் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  

அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தபோது, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் செட்டித் தெருவை சேர்ந்த அசோக் குமார் ஜெயின் (55) என்பவர் 260 கிராம் தங்க நகைகளை எடுத்து செல்வது தெரிந்தது. அவரிடம் விசாரித்தபோது, பாலிஸ் போடுவதற்காக சவுகார்பேட்டை பகுதிக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார். ஆனால், அதற்கான ஆவணம் அவரிடம் இல்லாததால், அந்த நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உரிய ஆவணம் இருந்தால் கொடுத்து விடுவோம் என்று தெரிவித்தனர்.

Tags : Seizure of 260 grams of undocumented gold jewelery: Flying Squadron Action
× RELATED நசரத்பேட்டையில் வீட்டை வாடகைக்கு...