×

பாதுகாப்பான மின் இணைப்புக்கு ஏற்பாடு: என்.ஆர்.தனபாலன் வாக்குறுதி

பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக போட்டியிடும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தினசரி தொகுதி முழுவதும் வீதி வீதியாக சென்று, மக்களின் குறைகளை கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, நேற்று வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலை, மகாகவி பாரதி நகர், சாமியார் மடம், கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘கூட்டணி கட்சியாக இருந்தாலும் தங்கள் கட்சி வேட்பாளர் போட்டியிடுவதாக நினைத்து இரவு, பகல் பாராமல் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் பணியாற்றி வருகின்றனர். இதற்கான பலனை தேர்தல் முடிவுகள் காட்டும்.

கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர், வியாசர்பாடியில் சில பகுதிகளில் மின் வயர்கள் தரைதளத்தில் மிகவும் ஆபத்தான முறையில் வீடுகளுக்கு செல்கிறது. இதனால் கொடுங்கையூரில் மின்சாரம் பாய்ந்து 2 குழந்தைகள் இறந்துள்ளனர். எனவே, சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று கொடுங்கையூர் மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் தரைதளத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின் வயர்களை முழுவதுமாக அகற்றி, பொதுமக்கள் அச்சமின்றி வசிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். பிரசாரத்தின்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : Arrange for secure electrical connection: NR Dhanabalan Promise
× RELATED நீங்கள் இருவரும் உங்கள் கூட்டாளியான...