பஸ்சை நிறுத்தியதால் பொதுமக்கள் அவதி: பெரிய ஒபுளாபுரம் கே.ராஜா (கும்மிடிப்பூண்டி தொகுதி)

கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்வதற்காக கடந்த 5 வருடங்களாகவே மாநகரப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் கொரொனா வைரஸ் தொற்றை காரணம் காட்டி மாநகரப் பேருந்துகளை நிறுத்தி விட்டனர். குறிப்பாக கும்மிடிப்பூண்டியில் இருந்து 557 மாநகர பேருந்து கும்மிடிப்பூண்டி - சென்னைக்கு தினந்தோறும் சுமார் ஐந்து முறை இயக்கப்பட்டது. ஆனால், தற்போது ஒரு வருடமாக இந்த பேருந்து நிறுத்தப்பட்டது. இதனால் கும்மிடிப்பூண்டி - செங்குன்றம் வரை ஒரு பஸ்சிலும், மற்றொரு பக்கம் செங்குன்றத்திலிருந்து - சென்னை பிராட்வே செல்ல வேண்டியுள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு, பொதுமக்களின் நலன் கருதி கும்மிடிப்பூண்டியில் இருந்து பிராட்வேக்கு மாநகர பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories:

>