×

கடவுள் நம்பிக்கை இல்லாதவருக்கு ஓட்டு போடுவீங்களா? கமல்ஹாசனை தாக்கிய நமீதா

கோவை தெற்கு தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடிகை நமீதா நேற்று பிரசாரம் மேற்கொண்டார். இந்த தொகுதியில் மநீம வேட்பாளராக கமல்ஹாசன் போட்டியிடுகிறார். கோவை காந்திபுரம் ராமர் கோவில் பகுதியில் நமீதா ‘தமிழ் உச்சரிப்பில்’ பேசியதாவது:

ஸ்ரீமதி வானதி சீனிவாசன் இங்க பெறந்து, வளந்து உங்கட்காக சேவ செஞ்சிட்டிருக்காங்க. கடைசியா அஞ்சி வருஷத்துல இந்த தொகுதில 18 ஆயிரம் மக்ளுக்கு வந்து மோடிஜியோட ஸ்கீம கொண்டுயோயி கொடுத்ருக்காங்க. 300 பேன் குழந்தைகளை அடாப்ட் பண்ணி அவங்க எஜூகேஷனக்கு 10 ஆயிரம் கொடுத்துருக்காங்க. அதுமட்டுமல்லாம எல்லாம் பெஸ்டிவெல்சுக்கும் கொழந்தைகளுக்கு கிப்ட் கொடுத்ருக்காங்க. தமிழ்நாடு கலாசாரத்துக்கு, கடவுள் நம்பிக்கயுள்ள பூமி. அப்போ நம்பிக்கயில்லாத ஒருத்தர (கமல்ஹாசன்) நம்பி நம்ம எப்டி ஓட் போட்றது? யோசிங்க.

இங்கே பெறந்து, வளந்து, படித்து, உங்க சகோதரி, உங்க அக்கா மதி வானதி சீனிவாசனுக்கு ஒட் போடுங்க. தாமரைக்கு ஓட் போடுங்க. ஏன் நெனக்கிறிங்களா? சென்ட்ரல் கவர்மண்ட் ஸ்கீம்ஸ் மற்றும் ஸ்டேட் கவர்மண்ட் ஸ்கீம்ஸ் எல்லாம் உங்க வீடு தேடி வரும். அது மாதிரி... கோயம்புத்தூர்ல தாமரை மலர்ம்... தமிழ்நாடு வளர்ம்...நன்றி. இவ்வாறு நமீதா பேசினார்.

Tags : God ,Namitha ,Kamal Haasan , Namitha
× RELATED இந்தியன் 2 🔥🔥 Kamal Haasan Speech at Indian 2 Trailer Launch | Shankar | Anirudh | Dinakaran news.