×

கட்சியினருக்கு டோஸ் விட்ட ராமதாஸ்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ஆளுங்கட்சி வேட்பாளர் போட்டியிடுகிறார். அவர் போட்டியிட்டாலும், அவர் நம்மவர். கடந்த முறை போன்று இப்போதும் மாம்பழ கட்சியினர் உள்குத்து வேலை பார்த்தால் என்ன செய்வது? என்ற தங்கள் கவலையை ஆளுங்கட்சி, மாம்பழ தலைவருக்கு தெரிவித்ததாம்.

இது ஏற்கனவே மாம்பழ தலைவருக்கு தெரியும் என்பதால், உள்ளூர் மாம்பழ சொந்தங்களை அழைத்துள்ளார். தலைவர் எதுக்காக அழைக்கிறார் என்ற சந்தேகத்துடன் சென்றவர்களுக்கு செம டோஸ் விழுந்ததாம். கடைசியில் ‘‘எது எப்படியோ, ஆளுங்கட்சியில நிக்கற ஆளும் நம்ம ஆளுதான். அவர் ஜெயிச்சே ஆகணும். ஏதாவது உள்குத்து போனமுறை போன்று செய்தால் தொலைத்து விடுவேன்’’ என்று எச்சரித்து அனுப்பினாராம். தலைவரிடம் நம்மள போட்டுக்கொடுத்தவங்கள விடக்கூடாது என்று மாம்பழ கட்சியினர் தேடிக்கொண்டிருக்கிறாங்களாம்.

Tags : Ramadas , Ramadas
× RELATED தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும்...