என்னை வீழ்த்த சதி பிரசாரத்தில் புலம்பித்தள்ளிய அதிமுக மாஜி எம்பி சுந்தரம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த முன்னாள் எம்பியும், மாவட்ட அதிமுக அவைத்தலைவருமான பி.ஆர்.சுந்தரம் இம்முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதில் ஏமாற்றமடைந்த அவருக்கு சேந்தமங்கலம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரத்தில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் தங்கமணி, தொகுதி வேட்பாளரான அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பி.ஆர்.சுந்தரமும் கலந்துகொண்டு பேசும்போது புலம்பித்தள்ளிவிட்டார்.

‘‘மூன்று மாதத்திற்கு முன்பு புதிதாக குடிநீர் திட்டத்தை அறிவித்தார்கள். அப்போது, தேர்தல் வரப்போகிறது, எப்படி திட்டத்தை நிறைவேற்றுவீர்கள் என்று கேட்டேன். அதற்காக பைப் லைன் மட்டுமாவது அமையுங்கள் என்றேன். ஆனால் ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்திற்கு அனுமதி பெற்று அறிவித்துள்ளார்கள். நிறைய பேர் என்னை எங்கே காணவில்லை என போன் செய்து கேட்கிறார்கள். நான் எங்கேயும் செல்லவில்லை. மலைக்குத் தான் சென்றேன். எதிரியை காட்டிலும் துரோகிதான் மோசமானவன். என்னை வீழ்த்துவதற்காக, சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு நியமனம் செய்துள்ளார்கள். தேர்தல் வந்து விட்டால் திமுகவினர் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். ஆனால் அதிமுகவினர் பிளவுபட்டு விடுகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு, பணியாற்றி வெற்றி பெற வேண்டும்’’ என்று தன் உள்ளக்குமுறலை வெளியிட்டார்.

Related Stories:

>