×

‘ஆட்சி மாற்றம் தேவை’ சிங்கமுத்து பேச்சால் அதிமுக பிரசாரத்தில் அதிர்ச்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூர் ஸ்ரீராம்நகரில் திருப்புத்தூர் அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ்க்கு வாக்கு சேகரித்து நடிகர் சிங்கமுத்து பேசினார். அவரது வருகைக்காக நீண்ட நேரமாக பெண்கள் காத்திருந்ததால் சோர்வடைந்தனர். அவர் வந்தபோதும் உற்சாகம் காட்டவில்லை. சிங்கமுத்து காமெடியாக பேசுவதாக நினைத்து பேச, ஒருவரும் சிரிக்காமல் சீரியசாக இருந்தனர். இதனால் மூட்-அவுட் ஆகி பேசினாரோ? என்னமோ?
‘‘இந்த தேர்தலில் மாற்றம் தேவை. ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது’’ என்று பேசினார் சிங்கமுத்து. இதனால் வேட்பாளர் உள்பட அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். எந்த கட்சிக்கு பிரசாரம் செய்கிறோம் என்பதை மறந்து இப்படி, உளறி கொட்டுகிறாரே என முணுமுணுத்தனர்.

Tags : AIADMK ,Singamuthu , Singamuthu
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...