×

பன்நோக்கு மருத்துவமனை அமைப்பேன்: இ.கருணாநிதி பிரசாரம்

தாம்பரம்: பல்லாவரம் தொகுதி திமுக வேட்பாளர் இ.கருணாநிதி நேற்று குரோம்பேட்டை நேரு நகர், வரதராஜன் தெரு, கக்கலாஞ்சவாடி, மும்மூர்த்தி நகர், இந்திரா காந்தி நகர், நியூ காலனி, சாஸ்திரி காலனி, கேம்பஸ் காலனி, கோதண்டம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.அப்போது அவர் பேசுகையில், ‘கலைஞர் முதல்வராக இருந்தபோது குரோம்பேட்டையில் அரசு மருத்துவமனை கொண்டுவரப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், இந்த மருத்துவமனையில் எந்த ஒரு பராமரிப்பு பணியும் நடைபெறவில்லை. இதனால் மழைக்காலங்களில் மருத்துவமனை உள்ளே தண்ணீர் தேங்கி நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
 
நான், சட்டமன்றத்தில் போராடி, 10.5 கோடி செலவில் புதிய கட்டிடம் மற்றும் சி.டி.ஸ்கேன் வசதிகளை பெற்று தந்துள்ளேன். அந்த புதிய கட்டிடத்தில் தான் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.திமுக ஆட்சி அமைந்தவுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை, மருத்துவ கல்லூரியுடன் கூடிய பன்நோக்கு மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன்’ என்றார். பிசாரத்தின்போது, தொகுதி பொறுப்பாளர் மீ.அ.வைத்தியலிங்கம், காங்கிரஸ் நகர தலைவர் தீனதயாளன், மதிமுக நகர செயலாளர் குரோம்பேட்டை நாசர், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த முகமது நைனார், மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சியை சேர்ந்த ஜிந்தா உட்பட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags : E. Karunanidhi , I will set up a multi-purpose hospital: E. Karunanidhi campaign
× RELATED திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்...