தேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் 3வது நாளாக பிரசாரம்

சென்னை:சட்டமன்றத் தேர்தலில் அமமுக கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேமுதிக தேர்தலை சந்திக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும், நேற்றுமுன்தினம் கும்மிடிப்பூண்டி, சென்னை எழும்பூர் ஆகிய பகுதிகளில் தனது கட்சி வேட்பாளர்களை சைகை மூலம் ஆதரித்து பிரசாரம் செய்தார். இந்த நிலையில், நேற்று மூன்றாவது நாளாக அவர் பழைய பல்லாவரம், அனகாபுத்தூரில் ஆளவட்டம்மன் கோயில் அருகே பகுதிகளில் திறந்தவேனில் நின்றவாறு, பல்லாவரம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் அனகை முருகேசனை ஆதரித்து தொண்டர்களை பார்த்து கையசைத்து ஓட்டு கேட்டார்.

Related Stories:

More
>