×

சரிதா நாயரை பலாத்காரம் செய்ததாக வழக்கு உம்மன்சாண்டிக்கு எதிராக ஆதாரம் இல்லை: கேரள குற்றப்பிரிவு போலீஸ் அறிக்கை

திருவனந்தபுரம்: சோலார் பேனல் ஊழல் சரிதா நாயரை  பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட வழக்கில் உம்மன்சாண்டிக்கு எதிராக எந்த  ஆதாரமும் இல்லை என குற்றப்பிரிவு போலீஸ் தெரிவித்துள்ளது. சோலார்  பேனல் ஊழல் வழக்கில் தொடர்புடைய சரிதாநாயர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதல்வர்  உம்மன்சாண்டி, எம்எல்ஏ அப்துல்லா குட்டி உள்பட காங்கிரஸ்  தலைவர்கள் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் கூறினார். இதையடுத்து 2018ல் 6 பேருக்கு எதிராக குற்றப்பிரிவு போலீஸ்  வழக்குப்பதிவு செய்தது. இதை விசாரிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது.

சரிதாநாயரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் குற்றப்பிரிவு  போலீஸ் விசாரணை முறையாக இல்லை என்றும், சிபிஐ விசாரிக்க வேண்டும்  என்றும், சரிதாநாயர் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் மனு கொடுத்தார்.  இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அதற்கு முன்பு விசாரணை நடத்திய  குற்றப்பிரிவு போலீஸ் இறுதி அறிக்கை தாக்கல் செய்தது. இந்த நிலையில் அந்த  அறிக்கையை வெளியிட கோரி தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் ஒருவர் மனு  செய்தார். அதன்படி குற்றப்பிரிவு போலீசின் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில்,  பலாத்கார புகாரில் உம்மன்சாண்டிக்கு எதிராக எந்த ஆதாரம் இல்லை.

கடந்த  2012ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி மாலை 4 மணியளவில் முதல்வரின் அரசு  இல்லத்துக்கு சரிதாநாயர் சென்றதாகவும், அங்கு வைத்து பலாத்காரம்  செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த சமயத்தில் உம்மன்சாண்டி வீட்டில் இல்லை. அந்த நேரத்தில் முதல்வர் அலுவலகத்தில் இருந்த  யாரும் சரிதாநாயரை பார்க்கவில்லை. 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்  என்பதால் போன் விபரங்களையும் சேகரிக்க முடியவில்லை என்று  குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நான் நம்ப மாட்டேன். எனது  புகாரில் உறுதியாக உள்ளேன் என்று சரிதாநாயர் கூறி உள்ளார்.

உம்மன்சாண்டி கூறுகையில், இடதுசாரி கூட்டணி ஆட்சிக்கு வந்து 5 ஆண்டு  ஆகும்வரை என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி முடிவடையும்  நேரத்தில் கட்சி தொண்டர்களை மகிழ்ச்சிப்படுத்த எனக்கு எதிராக சிபிஐ  விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. என் மீது புகார் கொடுக்க சரிதாநாயருக்கு  மார்க்சிஸ்ட் கட்சி ரூ.10 கோடி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளது என்றார்.

Tags : Umansansanti ,Sarita , Case of raping Sarita Nair No evidence against Oommen Chandy: Kerala Crime Branch Police report
× RELATED நீலகிரியில் சிறுத்தை தாக்கி...