×

போச்சம்பள்ளி பகுதியில் அதிகரித்து வரும் குழந்தை தொழிலாளர்கள்; நடவடிக்கை எடுக்க தயங்கும் மாவட்ட நிர்வாகம்

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி பகுதயில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையில் சுணக்கம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போச்சம்பள்ளி, மத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறு, குறு தொழிற்சாலைகள், கடைகள், குடிசை தொழில் செய்யும் நிறுவனங்கள் பெருமளவில் செயல்பட்டு வருகிறது. போச்சம்பள்ளி -செல்லம்பட்டி சாலையில் செயல்பட்டு வரும் தீப்பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தில், குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள், மளிகை கடைகள், நொறுக்கு தின்பண்ட கடைகளிலும் குழந்தை தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களை குறைந்த ஊதியம் கொடுத்து பணியில் அமர்த்தியுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘குழந்தை தொழிலாளர் முறையை தடுக்க பொதுமக்கள் மற்றும் பெற்றோருக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போச்சம்பள்ளி, மத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும். மேலும், கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என்ற வாசகத்தை எழுதி ஒட்ட வேண்டும்,’ என்றனர்.

Tags : Pochampally ,district administration , Increasing child labor in the Pochampally area; The district administration is reluctant to take action
× RELATED போச்சம்பள்ளியில் உள்ள பிரபல...