×

ஈரோட்டில் பரப்புரைக்கு வரும் பாஜக, அதிமுக வேட்பாளர்களுக்கு விவசாயிகள் சங்கத்தினர் பேனர் கட்டி எதிர்ப்பு

ஈரோடு: ஈரோட்டில் பரப்புரைக்கு வரும் பாஜக, அதிமுக வேட்பாளர்களுக்கு விவசாயிகள் சங்கத்தினர் பேனர் கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய வேளாண் சட்டங்களால் பாதிக்கப்பட்டிருக்க கூடிய விவசாயிகள் தொடர்ந்து கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்தனர். இந்த நிலையில் தான் தற்பொழுது பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்காக பிரச்சாரத்திற்கு வருபவர்களுக்கு நூதன முறையில் தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்கும் விதமாக வீடுகள் முன்பாக பேனர்களை கட்டி எதிர்ப்பு தெரிவித்திருப்பது பரபரப்பி ஏற்படுத்திருக்கிறது.

குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி போட்டியிடக்கூடிய மொரக்குறுச்சி தொகுதிக்குட்பட்ட அரசலூரில் தான் இதுபோன்ற பேனர்கள் வைக்கப்பட்டிருக்கிறது. பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஒரு அறிவிப்பு தெரிவிக்கும் விதமாக இந்த பேனரில் வாசகங்கள் இடம் பெற்றிருக்கின்றன. என் விவசாயத்தை அளிக்கக்கூடிய 3 விவசாய சட்டங்களையும், மின்சார சட்டதிருத்தத்தையும், கால்நடை இனப்பெருக்க சட்டத்திலும் ரத்து செய்த பின்பாக என்னிடம் வாக்கு கேட்டு வாருங்கள் என்று அந்த பேனரில் அச்சிடப்பட்டிருக்கின்றது.

ஈரோடு மாவட்ட விவசாய அமைப்புகளின் கூட்டு குழு சார்பாக இந்த பேனர் அச்சிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. நேற்று இது போன்ற பேனர்களை வைக்கும் போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இதற்க்கு விவசாய சங்கத்தினர் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். எங்களிடம் யார் வாக்கு கேட்க வர அனுமதிக்க வேண்டும் என்ற உரிமை எங்களுக்கு இருக்கிறது என விவசாயிகள் கூறியிருந்தனர்.

இன்று மீண்டும் இது போன்ற பேனரை வைத்து தங்களுடைய எதிர்ப்பை நூதன முறையில் தெரிவித்திருக்கின்றனர். மேலும் மொரக்குறுச்சி, ஈரோடு மேற்கு ஆகிய தொகுதிகளில் மட்டும் ஏறக்குறைய 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இது போன்ற பேனர்களை விவசாயிகள் தாங்களாக வரவை வீடுகளுக்கு முன்பாக கட்டி வேட்பாளர்களுக்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்க ஆயத்தமாகி திட்டமிட்டிருக்கின்றனர்.

ஏற்கனவே அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்திற்கு செல்லக்கூடிய பல இடங்களில் பொதுமக்கள் முற்றுகையிட்டு திருப்பி அனுப்பி கொண்டிருக்க கூடிய சூழ்நிலையில் தற்போது விவசாய சங்கத்தினர் தற்போது இது போன்ற நூதன முறையில் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக பேனர்களை வைத்திருப்பது பிரச்சாரத்திற்கு வரக்கூடிய பாஜக அதிமுக வேட்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.


Tags : Farmers Association ,Erood , Farmers' Union protests against BJP and AIADMK candidates campaigning in Erode
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு