சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி மதிப்புள்ள 8.820 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

சென்னை : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திரு. விக்கி, திரு. கிரி, திரு.வின்சன்ட், திரு. ஜம்புலிங்கம், திரு. பிரின்ஸ், திரு. சுரேந்தர், திரு. விகல், திரு. தினேஷ் குமார் ஆகியோர் அடங்கிய   ரயில்வே பாதுகாப்பு படை தேர்தல் சிறப்பு கண்காணிப்பு குழுவினர்,  நேற்று முன்தினம் (24.03.2021) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவையிலிருந்து மதியம் 01:55 மணிக்கு சென்னைக்கு  வந்த  இன்டர்சிட்டி விரைவு ரயில் வந்த நபரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சோதனை செய்ததில் அவரது பையில் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கோவை மாவட்டம் அசோக் நகர் பகுதியை சேர்ந்த திலீப் குமார், வயது 52 என்றும் நகைகளை வடிவமைத்து, சென்னையில் உள்ள நகைக்கடையில் கொடுப்பதற்காக வந்ததாக தெரிவித்தார்.ஆனால், அவற்றிற்கான  ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லாததால்,  அவர் ரயிலில் கொண்டுவந்த, சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான 8.820 கிலோ தங்க நகைகளை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்து,  தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories:

>