×

இனி ஈஸியாக ஓட்டுநர் உரிமம் பெற முடியாது… எட்டு போட டஃப் டெஸ்ட் வைக்கப்படும் என மத்திய அரசு அதிரடி

டெல்லி : ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிகள் கடுமையாக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல் அளித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட எதிர்க்கட்சி எம்பி கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த அமைச்சர் நிதின் கட்கரி, “ஓட்டுநர் உரிமம் பெற விழைபவர்களுக்கு இனி கடுமையான பரிசோதனைகள் நடைபெறும். வாகனத்தைப் பின்னாலிருந்து (Reverse) இயக்குவது கூட துல்லியமாக இருக்க வேண்டும்.

அதேபோல ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான மதிப்பெண் 69 சதவீதத்தைத் தாண்ட வேண்டும். ஓட்டுனருக்கான திறனை சோதிப்பதற்கான தகுதித் தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அப்போது தான் வாகன ஓட்டிகள் உரிமம் பெற முடியும். வாகனத்தில் ரிவர்ஸ் கியர் இருந்தால் கண்டிப்பாக வாகனத்தைப் பின்னால், வலதுபுறம், இடதுபுறம் திருப்புவது என அனைத்தும் துல்லியமாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : Driving License, Federal Government, Action
× RELATED பிரதமர் மோடியின் நண்பர்களிடம்...