×

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது பாதியில் உச்சம் :கதிகலங்க வைக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்!!

டெல்லி : இந்தியாவில் நாளுக்கு நாள் கோவிட்-19 தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 59,069 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 1,18,46,082ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 257 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்புகள் 1,60,983ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை தடுப்பூசி பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் வைரஸ் தொற்றின் பரவலும் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. சர்வதேச அளவில் கோவிட்-19 முதல் அலையை விட இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு எஸ்பிஐ ஆய்வு ஒன்றை நடத்தியது. இதற்கு “இரண்டாவது அலையின் பாதிப்புகள்: முடிவின் தொடக்கமா?” என்ற பெயரிடப்பட்டுள்ளது. அதில் கொரோனாவின் 2வது அலை வரும் ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது பாதியில் உச்சம் தொடப் போகிறது என்று தெரியவந்துள்ளது.

மேலும் பிப்ரவரி15ம் தேதியில் இருந்து அடுத்த 100 நாட்களுக்கு 2வது அலையின் தாக்கம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.அதேசமயம் தடுப்பூசியானது கொரோனாவை எதிர்கொள்ள முக்கியமான அம்சமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சிறப்பான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறத என்றும் தடுப்பூசி விநியோகத்தின் வேகத்தை அதிகப்படுத்தினால் கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றி கண்டு விடலாம் என்றும் ஆய்வின் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : India ,Katikalanga , India, Corona, Virus, Lockdown
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...