×

மாஸ்க் போடாததே கொரோனா பரவலுக்கு காரணம்; தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: முகக்கவசம் அணியாததால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து குறைய தொடங்கியது. தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 450-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வாரம் முதல் மீண்டும் தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்னன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; தமிழகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் கொரோனா படிப்படியாக உயர்கிறது. தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பால் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டும் வாய்ப்பு உள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முகக்கவசம் அணியாததால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணிவதன் மூலம் தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.

மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மூத்த மருத்துவ வல்லுநர்கள் தலைமையில் ஆலோசனை நடத்தி கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா முகாம்களாக ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருந்த இடங்களை மீண்டும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. மக்கள் தாங்களாகவே மாத்திரை எடுத்துக்கொள்ளக்கூடாது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; DOUBLE MUTANT கொரோனா தமிழகத்தில் இதுவரை கண்டறியப்படவில்லை. தமிழகத்தில் கொரோனா அதிகரிப்புக்கு வெளிநாட்டு கொரோனா பாதிப்பு காரணமில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.


Tags : Radhakrishnan , Failure to wear a mask is the cause of corona spread; We are taking steps to prevent the spread of corona: Interview with Health Secretary Radhakrishnan
× RELATED சொத்து, தொழில் வரி வசூல் மையங்கள் 29...