×

12 நேர பாரத் பந்த் தொடக்கம்... ரயில் மறியல், சாலை மறியலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்; ஆந்திராவில் பேருந்துகள் நிறுத்தம்!!

புதுடெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, விவசாய சங்கங்கள் இன்று நாடு தழுவிய பந்த் நடத்துகின்றன. மத்திய அரசின் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, டெல்லியில் சிங்கு, காஜிப்பூர் மற்றும் திக்ரி ஆகிய 3 எல்லைகளில் கடந்த 4 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் தொடங்கப்பட்டு 4 மாதங்கள் முடிவதை முன்னிட்டு, இன்று நாடு தழுவிய பந்த் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் ஏற்கனவே அறிவித்தன. அதன்படி, நாடு முழுவதும் இன்று 12 நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்களிலும் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

டெல்லி எல்லையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதே போல ஹரியானா, பஞ்சாப், ஒடிசா உட்பட பல்வேறு மாநிலங்களிலும் முழு அடைப்புப் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முழு அடைப்பிற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் அங்கு பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. மேலும் பல மாநிலங்களில் ரயில் மறியல் போராட்டம் காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் எத்தனை மாதங்கள் ஆனாலும் டெல்லியை காலி செய்ய போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். முழு அடைப்புப் போராட்டத்தை

 5 மாநிலங்களில் கிடையாது:

தமிழகம், அசாம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் இங்கு தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், இந்த 5 மாநிலங்களில் மட்டும் பந்த் நடைபெறாது என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

Tags : Bharat Bandh ,Andhra Pradesh , Rail Stir, Road Stir, Farmers
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி