×

வேகமெடுக்கும் கொரோனா 2வது அலை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,118 பேர் பாதிப்பு..! 257 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை அறிக்கை

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.60 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1.18 கோடியை  தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 59,118 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,18,46,652 ஆக உயர்ந்தது.

* புதிதாக 257 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,60,949 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 32,987 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,12,64,637 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,21,066 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 95.09% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.36% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 3.55% ஆக குறைந்துள்ளது.

* இதுவரை இந்தியாவில் 5,55,04,440 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags : Corona ,India , Accelerating Corona 2nd wave: 59,118 people affected in last 24 hours in India ..! 257 deaths: Health report
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...