மத்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு மாபெரும் துரோகமும், அநீதியும் இழைத்துள்ளது: சரத்குமார் ட்வீட்

சென்னை: ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை புறக்கணித்ததன் மூலம் மத்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு மாபெரும் துரோகமும், அநீதியும் இழைத்துள்ளது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்தியா தனக்கு ஆதரவளிப்பதாக உறுதி செய்ததென, இலங்கை அரசு தெரிவிப்பதன் மூலம் மத்திய அரசின் இரட்டடிப்பு வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தமிழர்களுக்கான நீதி தற்போது மறுக்கப்பட்டாலும், சர்வதேச அளவில் தமிழினத்தின் குரல் நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து ஒலிக்கும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: