மக்களின் மனதை கவர்ந்த பிரியங்காவின் நையாண்டி

மத்தியில் மோடி-அமித்ஷா கூட்டணியைப் போன்று, அசாம் மாநிலத்தில் பாஜ.வின் ஆட்சியிலும், கட்சியிலும் முதல்வர் சர்பானந்த சோனாவாலும், நிதி அமைச்சரான ஹிமாந்த் பிஸ்வா சர்மாவும் இரட்டையர்களாக இணைந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இம்மாநிலத்தில் சமீபத்தில் பிரசாரம் செய்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ‘அசாம் மக்களின் வாழ்க்கை திருதிராஷ்டிரன், சகுனி மாமாவால் தீர்மானிக்கப்படுவதாக உள்ளது. இந்நிலையை மாற்ற வேண்டும்’ என்று நையாண்டியுடன் வர்ணித்தார். மகாபாரதத்தில் பார்வை தெரியாத திருதிராஷ்டிர மன்னனை வஞ்சக எண்ணம் கொண்ட சகுனி தனக்கேற்றார் போல் ஆட்டிப் படைப்பார். இந்த அர்த்தத்தில் பிரியங்கா கூறிய இந்த கருத்து, அசாம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரம், பாஜ.வினருக்கு இது கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>