×

இது வேற மாதிரி டீலிங் வேட்பாளருக்கு மலர் தூவினா போதும்... 100 நாள் வேலையில் தில்லாலங்கடி

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில இலைகட்சியோட கூட்டணியான பழக்கட்சி வேட்பாளர் டி.கே.ராஜா போட்டியிடுறாரு. பழக்கட்சி வேட்பாளர் பிரச்சாரத்துக்கு மக்கள் கூட்டம் வர்றதே இல்லையாம். இதனால இலைகட்சிக்காரங்க தங்களது கை காசு போடாம, வேற மாதிரி டீலிங் பண்ணி கூட்டத்தை சேர்க்க ஆரம்பிச்சுட்டாங்க. இதற்காக 100 நாள் வேலை திட்டத்தில்தான் தில்லாலங்கடி செய்யுறாங்களாம். தங்களோட அதிகாரத்தை பயன்படுத்தி, கந்திலி ஒன்றியத்துல, 100 நாள் வேலை திட்டத்துக்கு போற பெண்களை, தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைச்சிட்டு போயிடுறாங்களாம். இப்படித்தான், கந்திலி ஒன்றியம், எலவம்பட்டி கிராமத்துக்கு பழக்கட்சி வேட்பாளர் 2 நாளைக்கு முன்னாடி பிரசாரத்துக்கு வந்தாராம். அப்போ, 100 நாள் வேலை திட்ட பணிக்காக வந்திருந்த பெண்கள் கிட்ட, வருகை பதிவேட்டுல கையெழுத்து வாங்கிக்கிட்டு, நீங்க யாரும் வேலை செய்ய தேவையில்ல, பழக்கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிக்க வரும்போது, அவரை மலர் தூவி வரவேற்று, ஆரத்தி எடுத்தா போதும்னு கட்டாயப்படுத்துறாங்களாம்.

இந்த வேலைக்கு ஊராட்சி செயலாளருங்களும் உடந்தையாம். இதை எதிர்த்து கேள்வி கேட்டா? வருகை பதிவேட்டுல ஆப்சென்ட் போட்டு, வேலையும் இல்லைன்னு சொல்லி திருப்பி அனுப்பிடுறாங்களாம். இப்படி அத்துமீறி வர்றாங்க, இலைக்கட்சிக்காரங்க. இதனால 100 நாள் வேலை இருக்கு, ஆனா அந்த வேலை நடக்கல, மாறாக, தேவையில்லாத வேலைகளை செய்ய வேண்டியிருக்குதுன்னு 100 நாள் வேலை திட்ட பெண்கள் புகார் தெரிவிக்கிறாங்க. சம்மந்தப்பட்ட அதிகாரிங்கதான், நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை வைக்கிறாங்க.

Tags : Dillalangadi , 100 day work
× RELATED அண்ணாமலையின் தில்லாலங்கடி வேட்புமனு:...