×

போதிய இருப்பும் இல்ல... வாக்கு சேகரிக்க ஆளும் இல்ல... நொந்து போன முரசு கட்சி வேட்பாளர்

மாங்கனி மாவட்டத்தில் இலை, மாம்பழ கூட்டணியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது போல் குக்கருக்கும், முரசுக்கும் சில தொகுதிகளில் முட்டல்கள் இருக்குதாம். குறிப்பாக ஏழைகளின் ஊட்டி என்று வர்ணிக்கப்படும் ஏற்காடு தொகுதி இதுக்கு அச்சாரம் போட்டிருக்காம். குக்கர்-முரசு கூட்டணியில் இந்த தொகுதி முரசுக்கு ஒதுக்கப்பட்டிருக்கு. இங்கு போட்டியிடும் வேட்பாளர் தொகுதியில் கொஞ்சம் பிரபலமானவர். கடந்த முறை, மநகூட்டணியில் முரசு இருந்த போதும் அவரு தான் போட்டியிட்டாரு. கணிசமான ஓட்டுக்களையும் வாங்கினாரு. இதை காரணமாக வச்சே, இந்த முறையும் வாய்ப்பு கொடுத்திருக்காங்களாம். ஆனால், தனது கட்சியில் இருந்ேதா, கூட்டணி கட்சியில் இருந்தோ, இதுவரை அவருக்கு வாக்கு சேகரிக்க யாரும் வரலையாம். கையிலும் போதிய இருப்பு இல்லையாம்.

இதனால் நொந்து போன வேட்பாளர், தமிழக விவிஐபியின் நிழலானவரை நாடி இருக்காராம். இது குக்கர் கட்சிக்காரங்க மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்காம். மேலும் விவகாரம் மெல்ல, மெல்ல பூதாகரமாகி தற்போது கூட்டணியில் விரிசலை உண்டாக்கி இருக்காம். ‘‘அட போங்க சார்.. திராவிட கட்சிகளின் கூட்டணிகள் களத்தில் கலக்கிக் கிட்டு இருக்காங்க. ஆனால், எங்க கூட்டணிக்கு ஹெட்டாக இருக்கும் குக்கர் கட்சி நிர்வாகிங்க, இதை கண்டுக்காமலே இருக்காங்க. இதில வேற இலை கட்சிக்கு நாங்க சப்போர்ட் பண்ணுவதா அவங்களே கிளப்பி விடுறாங்க. இப்படியே போய்க்கிட்டு இருந்தா, இலைக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதெல்லாம் வெறும் வாய்வார்த்தையா மட்டும் தான் இருக்கும்’’ என்று வெடிக்கின்றனர் முரசு நிர்வாகிங்க.

Tags : Fermented Muriyu Party , dmdk
× RELATED மதரீதியாக வாக்கு சேகரித்த புகாரில்...