×

மூன்றரை மாதங்கள் நடைபெறும் ஹரித்துவார் கும்பமேளா 30 நாட்களாக குறைப்பு: கொரோனா நெகட்டிவ் சான்று அவசியம்

டேராடூன்: மூன்றரை மாதங்கள் கொண்டாடப்படும்  புகழ்பெற்ற ஹரித்துவார் கும்பமேளா திருவிழா, 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஹரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா திருவிழா நடைபெறும். கடைசியாக இங்கு, கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி 14 முதல் ஏப்ரல் 28 வரை கும்பமேளா நடைபெற்றது. இதனை தொடர்ந்து, தற்போது கும்பமேளா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், விழா நடைபெறும் காலமானது வரலாற்றிலேயே முதல் முறையாக 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் 30ம்  தேதி வரை மட்டுமே இந்த விழா நடைபெறும். ஏப்ரல் 12, 14, 17 தேதிகளில் புனித நீராடல் நடைபெறும். விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் கொரோனா நோய் தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் எடுத்து வருவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த பரிசோதனை, விழாவுக்கு வருவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்டதாக இருக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Haridwar Kumbh Mela , Three and a half months, Haridwar, corona negative testimonial
× RELATED ஹரித்துவார் கும்பமேளாவில் பங்கேற்ற 30...