ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் 2 போலீசார் வீரமரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் போலீசார் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகளும், பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகளை சேர்ந்த உள்ளூர் தீவிரவாதிகளும் பொதுமக்கள் மீதும், பாதுகாப்பு படையினர் மீதும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு படைகள் அதிரடி நடவடிக்கை எடுத்து, இவர்களை வீழ்த்தி வருகின்றன.

இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள லாவபோரா பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) வீரர்கள் நேற்று வழக்கம் போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்களை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.

Related Stories:

>