×

அமெரிக்க வரலாற்றில் முதல் முறை திருநங்கையை அமைச்சராக நியமித்தார் அதிபர் பைடன்

வாஷிங்டன்: அமெரிக்காவில் திருநங்கை ஒருவரை அமைச்சராக நியமித்து, அதிபர் பைடன் வரலாறு படைத்துள்ளார்.  அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்று உள்ள ஜோ பைடன், தனது அமைச்சரவையில் எல்லா தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளித்து வருகிறார். குறிப்பாக, தனது அரசில் இந்திய வம்சாவளியினருக்கு இந்நாட்டில் இதுவரையில் இல்லாத வகையில், மிகப்பெரிய முக்்கிய பதவிகள் வழங்கி கவுரவித்துள்ளார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் இருக்கிறார்.இந்நிலையில், அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், திருநங்கை ஒருவரை சுகாதாரத் துறை இணையமைச்சராக பைடன் நியமித்துள்ளார்.

ரேச்சல் லெவின் என்ற திருநங்கை டாக்டர், இப்பதவிக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவருடைய நியமனத்துக்கு ஆளும் குடியரசு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பைடன் அதை நிராகரித்தார். ரேச்சலின் நியமனத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் மசோதா, செனட் சபையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரேச்சலுக்கு ஆதரவாக 52 வாக்குகள் கிடைத்து பெற்றி பெற்றார். அவருடைய நியமனத்தை எதிர்த்து 48 வாக்குகள் பதிவாகின. இதன்மூலம், அமெரிக்காவின் முதல் திருநங்கை அமைச்சர் என்ற பெருமையை ரேச்சல் பெற்றுள்ளார்.

Tags : President Biden , US, Transgender, Minister, President Biden
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...