×

தொடங்கியது ‘ஒலிம்பிக் சுடர்’ ஓட்டம்: இந்த ஆண்டு ஒலிம்பிக் நடக்கும்

புகுஷிமா: ஜப்பானில் நடைபெற உள்ள  ‘டோக்கியோ-2020’ ஒலிம்பிக் போட்டிக்கு முன்னோட்டமாக ஒலிம்பிக் சுடர் ஓட்டம்  தொடங்கியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்னோட்டமாக பராம்பரிய ஒலிம்பிக் சுடர் ஓட்டம் நேற்று தொடங்கியது.  அணு உலை வெடிப்பு, ஆழிப்பேரலை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டதுதான்  ஜப்பானின் வடக்குகிழக்கு நகரம் புகுஷிமா. அந்த நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் தொடங்கியது. முதலில் ஜப்பான் கால்பந்து வீராங்கனை அசுசா இவாஷிமிசு ஒலிம்பிக் சுடரை ஏற்றினார். தொடர்ந்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஒலிம்பிக் சுடரை ஏந்தி ஓடுகின்றனர்.

 விழாவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தலைவர் செய்கோ ஹஷிமோடோ, விளையாட்டு பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். கொரோனா பீதிக்கு இடையில் கடுமையான விதிமுறைகளுடன் ஒலிம்பிக் சுடர் தொடர் ஓட்டம் 121 நாட்களுக்கு ஜப்பானின் முக்கிய நகரங்களின் வழியாக செல்லும். இறுதியில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோ நகரை சென்றடையும். கொரோனா பீதி, ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்க வேண்டிய ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால்  பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் நடந்த கிரீசில் இருந்து வழக்கம் போல் ஒலிம்பிக் சுடர் கடந்த ஆண்டு மார்ச் மாதமே ஜப்பான் வந்து சேர்ந்து விட்டது. இயற்கை, செயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்பட்ட புகுஷிமாவில் இருந்து ஒலிம்பிக் சுடர் ஓட்டம் தொடங்கியிருப்பது, அந்நாட்டு மக்களிடையே புதிய நம்பிக்ைகயை ஏற்படுத்தியுள்ளது. கூடவே தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் இந்த ஆண்டு கட்டாயம் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பும் உலகம் முழுவதும் உருவாகி உள்ளது.

Tags : Olympic Flame ,'s ,Olympics , Started, Olympic Flame, Olympic
× RELATED ஜி.எஸ்.டி. வரி அல்ல, வழிப்பறி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்