×

மைசூரு கமிஷனர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்: மேலவை உறுப்பினர் வலியுறுத்தல்

மைசூரு:மைசூரு போலீஸ் கமிஷனர் ரோந்து பணியில் ஈடுப்பட வேண்டும் என்று மேலவை உறுப்பினர்
எச். விஷ்வநாத் வலியுறுத்தினார். மைசூரு நகரின் போகதி-ஹினகல்வர்த்துலா சாலையில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையின் போது பைக் ஓட்டுனர் கீழே விழுந்து உயிரிழந்தார். அப்போது விபத்துக்கு போலீசார் காரணம் என்று பொதுமக்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தி போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கினர். இவர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். அப்படி தடியடி நடத்திய போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மேலவை உறுப்பினர் எச்.விஷ்வநாத் போலீசாரின் நடவடிக்கைகள் வழி தவறியுள்ளது என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:பைக் ஓட்டுனரை சாகடித்த காரணத்துக்காக போக்குவரத்து போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளதாக தெரிகிறது. சிட்டி போலீஸ் சட்டத்தில் என்ன சொல்கிறது விரட்டி சென்று பைக்கை பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதா என்று கேள்வி எழுப்பினார். அரசு பணத்தில் கேமரா, உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தப்பி செல்பவர்களை எளிதாக பிடிக்க முடியும். மைசூரு போலீசார் வழி தவறியுள்ளனர். இதனால் விரட்டி சென்று வாகனங்களை பிடிப்பதை விட வேண்டும்.
போலீசார் தடுக்கும் போது வாகன ஓட்டுனர்கள் தப்பி சென்றால் கைகேமரா, சி.சி.கேமரா ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். மைசூரு சம்பவம் குறித்து உள்துறை அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும்.

மைசூரு போலீஸ் கமிஷனர் சாலைக்கு வருவதில்லை, ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை அவர் வந்து எத்தனை ஆண்டுகள் கடந்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். மைசூருவில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் எத்தனை பேர் உள்ளார்கள் இவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று புரியவில்லை. போக்குவரத்து போலீசரால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியாது. போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும். போலீஸ் கமிஷனருக்கு மக்கள் பிரதிநிதிகள், மக்கள் மீது கவுரவம் இல்லை என்றார்.


Tags : Mysore Commissioner ,Upper House , Mysore Commissioner should be involved in patrolling: Upper House member insists
× RELATED கர்நாடகா பா.ஜ பெண் தலைவர் மீண்டும் காங்கிரசில் இணைந்தார்