×

கோலாரை தொழுநோய் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்: பஞ்சாயத்து முதன்மை செயலதிகாரி அறிவுரை

கோலார்: கோலார் நகரில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட சுகாதார துறை மற்றும் மாவட்ட பஞ்சாயத்து ஆகியவை கூட்டாக இணைந்து தொழுநோய் தடுப்பு தினம் அனுசரித்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட என்.எம்.நாகராஜ்  பேசும்போது, தொழுநோய் பாதித்தவரை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முழுமையாக குணமாக்க முடியும். தொழுநோய் இருப்பதாக தெரியும் நபர்கள் வெட்கப்படாமல் மருத்துவமனைக்கு ெசன்று சிகிச்ைச பெற வேண்டும். ஒருகாலத்தில் தொழுநோய் பாதித்தவரை சமூகம் புறகணித்தது. இந்நோய் தாக்கியர்கள் பாவம் செய்தவர்களாக கருதி ஒதுக்கி வைத்தனர்.

குடும்பத்தினர் உள்பட சமூகத்தில் உள்ளவர்களின் அன்பு, அரவணைப்பு, ஆதரவு கிடைக்காத சோகத்தில் பலர் தற்ெகாலை செய்து கொண்டனர். பலர் பிச்சைக்காரர்களாக தெருவோரங்களில் வாழ்ந்தனர். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் அவர்கள் அலட்சியம் காட்டியதால், பலருக்கு நோய் தொற்றும் ஆபத்து ஏற்பட்டது. ஆனால் தற்ேபாது நிலைமை சீரடைந்துள்ளது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை பேணிகாத்து சிகிச்சை அளிக்க பல தன்னார்வ தொண்டு அமைப்புகள் இயங்கி வருகிறது. மாநில அரசும் தொழுநோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் திறந்துள்ளது.

உலக சுகாதார மையம் வரும் 2025ம் ஆண்டு இறுதிக்குள் 100 சதவீதம் தொழுநோய் இல்லாத உலகம் உருவாக வேண்டும் என்று பிரகடனம் செய்துள்ளது. இதை செயல்படுத்தி கோலார் மாவட்டத்தை உருவாக்க சுகாதார துறையினர் முயற்சிக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Kolar , To make Kolar a leprosy free district: Panchayat Chief Executive Advice
× RELATED கர்நாடகாவில் அதிமுக போட்டி?