×

சவ்வாக இழுக்கும் பாதாள சாக்கடை பணி: தேர்தலை புறக்கணிக்க காரைக்குடி மக்கள் முடிவு

காரைக்குடி: பாதாள சாக்கடை பணி முடிக்கப்படாததை கண்டித்து காரைக்குடி நகராட்சி மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து சுவரொட்டி ஒட்டியுள்ளனர். இன்று பிரசாரத்திற்காக முதல்வர் வரும் நிலையில், தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2016ல் துவக்கப்பட்ட இத்திட்டம் இதுவரை முடிக்கப்படவில்லை. பணி மேற்கொள்ளப்பட்ட இடத்தில் சாலை அமைக்காததால் குண்டும், குழியுமாக உள்ளது.

மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க கோரியும், சாலை பணியை முடிக்க கோரியும் சாலை பாதுகாப்பு குழுவினர் பல்வேறு போராட்டம் நடத்தியும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், தேர்தலை புறக்கணிப்பதாக கூறி நகர் முழுவதும் சாலை பாதுகாப்பு குழுவினர் சுவரொட்டி ஒட்டியுள்ளது. பிரசாரத்திற்காக முதல்வர் பழனிசாமி இன்று வரும் தருவாயில், தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சாலை பாதுகாப்பு குழுவினர் கூறுகையில், ‘கடந்த 2016 தேர்தலுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட பாதாள சாக்கடை பணி இன்னும் நிறைவு பெறவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என தெரியவில்லை.  எங்களது கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லவே போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளோம்’ என்றனர்.

Tags : Karaikudi , Sewerage work, election boycott, Karaikudi people
× RELATED காரைக்குடியில் கிணற்றுக்குள் விழுந்த மாற்றுத்திறனாளி இளைஞர்..!!