×

நாளை 2வது ஒருநாள் போட்டி தொடரை வெல்லுமா இந்தியா?...பதிலடி கொடுக்க இங்கிலாந்து தயார்

புனே: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் புனேவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் இந்தியா 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2வது போட்டி நாளை நடக்கிறது. இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா களம் காண்கிறது. முதல் போட்டியில் 98 ரன் அடித்து தவான் பார்முக்கு திரும்பினார். கோஹ்லி, கே.எல்.ராகுல், குர்னல் பாண்டியா அரைசதம் விளாசி அசத்தினர்.

பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா முதலில் ரன்களை வாரி இறைத்தாலும் பின்னர் சிறப்பாக வீச 4 விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு உதவினார். காயம் தான் இரு அணிகளுக்கும் பெரும் பிரச்னையாக உள்ளது. பீல்டிங்கின் போது தோள்பட்டை காயம் காரணமாக ஸ்ரேயாஸ் அய்யர் தொடரில் இருந்துவிலகி உள்ளார். இதேபோல் ரோகித் சர்மாவுக்கு மார்க்வுட் வீசிய பந்தில் வலது முழங்கையில்தாக்கி ரத்தம் வந்தது. இதனால் அவர் பீல்டிங் செய்யவில்லை. நாளைய போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் தான். இதனால் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப்பன்ட் அணியில் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. முதல் போட்டியில் ரன்களை வாரி இறைத்த குல்தீப் யாதவ்விற்கு பதில் யுகேந்திர சாஹல் சேர்க்கப்படுவார் என தெரிகிறது. மறுபுறம் இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் களம் காண்கிறது.

மோர்கன், சாம் பில்லிங்ஸ்  பீல்டிங்கின் போது காயம் அடைந்ததால் நாளை விளையாடுவார்களாக என்பது உறுதிபடுத்தப்படவில்லை. ஒருவேளை மோர்கன் ஆடாவிடில் பட்லர் கேப்டனாக செயல்படுவார். இதை தவிர அணியில் ஒருசில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய மைதானமான இது பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் யார் முதலில் பேட்டிங் செய்தாலும் 300 ரன்களை எளிதான அடிக்கலாம். பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.30மணிக்கு தொடங்கி நடக்கிறது. இரு அணிகளும் நாளை 102வது ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதுகின்றன. இதுவரை மோதிய 101 போட்டியில் இந்தியா 54, இங்கிலாந்து 42 போட்டிகளில் வென்றுள்ளன. 2 போட்டி டையில் முடிந்துள்ளது. 3 போட்டி கைவிடப்பட்டுள்ளது.

டெல்லி கேப்பிட்டல் கேப்டன் அஸ்வின்?
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் (26), இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் பீல்டிங்கின் போது தோள்பட்டையால் காயம் அடைந்தார். இதனால் எஞ்சிய 2 போட்டியிலும் இருந்து விலகி உள்ளார். அவர் காயத்தில் இருந்து மீள 6 வாரம் ஆகலாம். ஓரு வேளை அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் களம் இறங்க மேலும் சில மாதங்கள் ஆகும். ஐபிஎல்லில் டெல்லி கேப்பிட்டல் அணியின் கேப்டனான அவர் முதல் பாதியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி அணியை வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது. ரிஷப் பன்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தெரிகிறது. டெல்லி கேப்பிட்டல் ஐபிஎல்லில் தனது முதல் போட்டியில் ஏப்.10ம்தேதி மும்பையில், சென்னை சூப்பர் கிங்சுடன் ஆட உள்ளது.

Tags : India ,UK , Will India win the 2nd ODI series tomorrow? ... England ready to retaliate
× RELATED இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதராக கேமரூன் நியமனம்