×

விடாமல் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்..! இந்தியாவில் நேற்று மட்டும் 53,476 பேர் பாதிப்பு; 251 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை அறிக்கை

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.60 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1.17 கோடியை  தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 53,476 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,17,87,534 ஆக உயர்ந்தது.

* புதிதாக 251 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,60,692 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 26,490 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,12,31,650 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,95,192 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 95.28% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.36% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 3.35% ஆக குறைந்துள்ளது.

* இதுவரை இந்தியாவில் 5,31,45,709 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


Tags : India , Corona virus threatening to let go ..! In India alone, 53,476 people were affected yesterday; 251 deaths: Health report
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...