×

ஸ்டட்கர்ட் டென்னிஸ் விலகினார் ஒசாகா

பெர்லின்: ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இருந்து, உலகின் 2வது ரேங்க் வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்) விலகுவதாக அறிவித்துள்ளார். ஜெர்மனியில் ஏப். 17ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் ஒசாகா விளையாடாவிட்டாலும்... நடப்பு சாம்பியன் பெத்ரா குவித்தோவா, நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி, சிமோனா ஹாலெப், சோபியா கெனின், எலினா ஸ்விடோலினா, அரினா சபலென்கா, கரோலினா பிளிஸ்கோவா என தரவரிசையில் டாப்-10ல் உள்ள 7 வீராங்கனைகள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில், இத்தொடர் பூட்டிய அரங்கில் நடைபெற உள்ளது.

Tags : Stuttgart ,Osaka , Stuttgart tennis quits Osaka
× RELATED சில்லி பாய்ன்ட்…