×

இரண்டாவது இன்னிங்சில் இலங்கை உறுதியான ஆட்டம்

நார்த் சவுண்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்டில், இலங்கை அணி 2வது இன்னிங்சில் உறுதியுடன் விளையாடி கணிசமான முன்னிலை பெற்றது. ஆன்டிகுவா ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 169 ரன்னுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 271 ரன் குவித்து ஆல் அவுட்டானது. 102 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன் எடுத்திருந்தது. கேப்டன் கருணரத்னே 3 ரன்னில் வெளியேறிய நிலையில், லாகிரு திரிமன்னே - ஒஷதா பெர்னாண்டோ ஜோடி 2வது விக்கெட்டுக்கு 162 ரன் சேர்த்தது. ஒஷதா 91 ரன் (149 பந்து, 11 பவுண்டரி), திரிமன்னே 76 ரன் (201 பந்து, 4 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தனர்.

சண்டிமால் 4 ரன்னில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார். தனஞ்ஜெயா டி சில்வா 46 ரன், பதும் நிசங்கா 21 ரன்னுடன் களத்தில் இருந்தனர். நேற்று நடந்த 4வது நாள் ஆட்டத்தில் அரை சதத்தை பூர்த்தி செய்த தனஞ்ஜெயா 50 ரன் (79 பந்து, 6 பவுண்டரி) எடுத்து ஜோசப் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். 2வது இன்னிங்சில் கணிசமான முன்னிலை பெற்றுள்ளதால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இலங்கை கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Sri Lanka , Sri Lanka solid game in the second innings
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்