×

திருநீர்மலை சாலை அமைத்தேன்: டி.கே.எம்.சின்னையா பெருமிதம்

சென்னை: தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.கே.எம்.சின்னையா தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட கடப்பேரி, திருநீர்மலை சாலை ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெண்கள் உற்சாகத்தோடு ஆரத்தி எடுத்துவரவேற்றனர். பின்னர் அவர் பேசியதாவது, “30 ஆண்டுகளாக போடப்படமால் இருந்த தாம்பரம்  திருநீர்மலையை இணைக்கும் சாலை அமைச்சராக இருந்தபோது, முதல்வர் ஜெயலலிதாவிடம் சொல்லி அமைத்து கொடுத்தேன். இதேபோல், பட்டியலினத்து மக்கள் அதிகமாக பயன்படுத்தும் தாமரை குளத்தை  அமைச்சராக நான் இருந்தபோது  தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன். கடப்பேரி பகுதியில் சாலைகள் அமைத்து கொடுத்தேன். மின்விளக்குகள், முக்கிய சந்திப்புகளில் உயர்கோபுர விளக்குகள் எல்லாவற்றையும் பெற்று தந்தேன்.

எடப்பாடி அரசு பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறது. அந்த திட்டங்கள் எல்லாம் தொகுதிக்கு உடனடியாக கொண்டுவரப்படும். கொரோனா காலத்தில் என்னால் முடிந்த உதவியும், அதிமுக சார்பிலும் உதவியும் பெற்று தந்தேன். ” என்றார். இதில் தாம்பரம் பெருநகர் மன்ற முன்னாள் துணை தலைவர் கோபிநாதன், நகர செயலாளர் கூத்தன், மாவட்ட பொருளாளர் பரசுராமன், நகர் மன்ற உறுப்பினர் எட்வர்ட், மார்க்கெட் பாபு, நாகூர் ஹனி, பாஜ தாம்பரம் பெருநகர மேற்கு பகுதி தலைவர் குருநாதன், சூரியநாராயணன், சுந்தரம் காலனி கண்ணாயிரம், பாமக விநாயகம், புரட்சி பாரதம் கேட் சேகர், தமாகா மாவட்ட தலைவர் லயன் மணி உள்பட கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.


Tags : Thirunirmalai Road ,TKM Chinnaiya , I built Thirunirmalai Road: TKM Chinnaiah is proud
× RELATED தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் டி.கே.எம்.சின்னையா பிரசாரம்