புரோட்டா போடும் பரமக்குடி வேட்பாளர்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ சதன் பிரபாகர் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் பரமக்குடி சின்னக்கடை வீதியில் பிரசாரம் மேற்கொண்டபோது ஓட்டல் ஒன்றில் கொத்து புரோட்டா போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து நெசவாளர் குடியிருப்புகள் மிகுந்த பகுதியில் பிரசாரம் செய்தபோது, நெசவாளரின் வீட்டிலிருந்த கைத்தறியில் நெசவு செய்தார். இறைச்சி கடை ஒன்றில் ஆட்டிறைச்சியை வெட்டி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சதன் பிரபாகர் ஏற்கனவே குத்தாட்டம் ஆடி வாக்கு சேகரித்த நிலையில், தற்போது கொத்து புரோட்டா போடுவது, கறி வெட்டுவது என பிரசாரத்தில் ஏதாவது செய்து ஓட்டு கேட்டு வருகிறார். ‘‘தொகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல், புரோட்டா போட்டு சீன் காட்டி என்ன செய்ய...’’ என மக்கள் கேட்கின்றனர்.

Related Stories:

>