×

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி; பேட்டிங் வரிசையில் ஒவ்வொரு இடத்திற்கும் 2,3 வீரர்கள் உள்ளனர்: கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி

புனே: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்தொடர் புனேவில் நடந்து வருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து  வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா  50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன் எடுத்தது. தவான் 98    (பந்து106,11பவுண்டரி,2 சிக்சர்), ரோகித்சர்மா 28,  விராட் கோஹ்லி 56 ரன் எடுத்தனர்.  கே.எல்.ராகுல் 62(43பந்து, 4பவுண்டரி,4 சிக்சர்), அறிமுக வீரர்  குர்ணல் பாண்டியா 58 (31பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய்-பேர்ஸ்டோவ் முதல் விக்கெட்டிற்கு 14 ஓவரில் 135 ரன் எடுத்து சிறப்பான தொடக்கம் அளித்தனர். ஜேசன் ராய் 46 (35பந்து), பேர்ஸ்டோவ் 94 ரன்னில் (66பந்து, 6பவுண்டரி,7 சிக்சர்)வெளியே பின்னர் வந்தவர்கள் அடுத்தடுத்து நடையை கட்டினர்.

ஸ்டோக்ஸ் 1, மோர்கன் 22, பட்லர் 2, சாம்பில்லிங்ஸ் 18, மொயின் அலி 30 ரன்னில் அவுட் ஆகினர். 42.1ஓவரில் 251 ரன்னுக்கு இங்கிலாந்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் அறிமுக வேகம் பிரசித் கிருஷ்ணா 4, தாகூர் 3, புவனேஸ்வர்குமார் 2 விக்கெட் எடுத்தனர். தவான் ஆட்டநாயகன்விருது பெற்றார். வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் கோஹ்லி கூறுகையில், சமீபத்திய காலங்களில் எங்களது இனிமையான வெற்றிகளில் ஒன்று. ஒருநாள் போட்டிகளில் நாங்கள் பல நல்ல ஆட்டங்களில் வெல்லவில்லை. எங்கள் அனைத்து பந்து வீச்சாளர்களிடமிருந்தும் ஒரு மறுபிரவேசம். ஆரம்பத்தில் பிரசித் ரன்களை அதிகம் கொடுத்த பின் திரும்பி வருவது ஆச்சரியமாக இருந்தது. க்ருணலும். ஷர்துல், புவி சிறப்பாக பந்துவீசினர். நான் இப்போது மிகவும் பெருமை வாய்ந்த மனிதன். அணி சிறந்த தன்மையையும் தீவிரத்தையும் காட்டியது. இளம்வீரர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம் மற்றும் அவர்களின் திறமைகளை ஆதரிக்கிறோம். பேட்டிங் வரிசையில் ஒவ்வொரு இடத்திற்கும்ஆரோக்கியமான போட்டி உள்ளது.

ஒவ்வொரு ஸ்லாட்டிற்கும் 2-3 வீரர்கள் எங்களிடம் உள்ளனர். நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம். டி.20 போட்டியில் தவானுக்கு வாய்ப்பு கிடைக்காதபோது, வீரர்களை ஊக்குவித்தார், தண்ணீர் போன்ற கூடுதல் பொருட்களுடன் ஓடினார். இன்று அவர் மிக முக்கியமான பங்களிப்பை வங்கினார். அவர் கடுமையான ஓவர்களில் பேட் செய்ததால் அவரது இன்னிங்ஸ் மிகவும் முக்கியமானது. நான் களத்தில் இருந்தபோது 31-40 ஓவரில் அடித்து ஆடுவோம் என்றேன். ஆனால் நாங்கள் ஒரு சில விக்கெட்டுகளை இழந்தோம், ஆனால் க்ருணலும் ராகுலும் சிறப்பாக ஆடினர்.  நான் ஷிகருடன் நின்றிருந்தால் 350 ரன் கிடைத்திருக்கும், என்றார்.

இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறுகையில்,  பந்து வீச்சாளர்கள் மிகச்சிறப்பாக பந்து வீசினர். நல்ல தொடக்கம் கிடைத்தும் அதை நாங்கள் எடுத்துச்செல்ல  தவறி விட்டோம்.இந்திய எங்களை விட சிறப்பாக செயல்பட்டது. அவர்கள் வெற்றிபெற தகுதியானவர்கள். எங்களுக்கு பொருந்தாத முற்றிலும் மாறுபட்ட முறையில் விளையாடுவதை விட 10-20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதை விட இதுபோன்று தோற்றது எங்களுக்கு நல்லது. இது எங்களை எப்போதும் முன்னோக்கிநகர்த்துகிறது, என்றார்.  1-0 என இந்தியா முன்னிலை வகிக்க 2வது ஒருநாள்போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.


சிறந்த 12வது வீரராக செயல்பட்டேன்
ஷிகர் தவான் கூறுகையில், எனது செயல்திறனில் மிகவும் மகிழ்ச்சி அதை விட, எங்கள் அணி வென்றில் மகிழ்ச்சி அனைத்து ஸ்மார்ட் வேலைகளும் பலனளித்தன. முதல் 10 ஓவர்கள் தாக்குபிடித்து விட்டால் பின்னர் வேகமாக ரன் எடுக்க முடியும் என்பது தெரியும் . மிகவும் சோகமாக இருக்கும் நபர் அல்ல. மகிழ்ச்சியாக இருப்பவன். சதம் அடிக்க வேண்டிய அவசரத்தில் அந்த ஷாட்டைஅடிக்க வில்லை. ஒரு ஷாட்டுக்கு சென்ற நிலையில் கேட்ச் ஆகி விட்டேன். நான் வாய்ப்பு கிடைக்காத போது நல்ல 12வது வீரராக செயல்பட்டேன்.  சுற்றி ஓடி, தண்ணீரை பரிமாறினேன். எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதைப் பிடிப்பேன் என்பது என் தலையில் தெளிவாக இருந்தது, என்றார்.

குருணல் பாண்டியா உருக்கம்
நேற்றைய போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு உதவியவர் குருணல் பாண்ட்யா.  அவரது தந்தை கடந்த ஜனவரியில் 71வது வயதில் காலமானார்.  நேற்று வெற்றிக்கு பின் டுவிட்டரில், ஒவ்வொரு பந்திலும் என்னுடைய மனதிலும், இருதயத்திலும் நீங்கள் இருந்தீர்கள்.  நீங்கள் என்னுடன் இருந்தீர்கள் என உணர்ந்தேன்.  எனது முகத்தில் கண்ணீர் வழிந்தோடியது.  எனக்கு வலிமையாக இருந்ததற்கும், எனக்கு மிக பெரிய உறுதுணையாக இருந்ததற்கும் நன்றி தெரிவிக்கிறேன்.  உங்களை பெருமையடைய செய்து விட்டேன் என நம்புகிறேன்.  இது உங்களுக்கானது.  நாங்கள் செய்யும் ஒவ்வொரு விசயமும் உங்களுக்கானது என்று தெரிவித்து உள்ளார்.

ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ், மோர்கன் காயம்
ரோகித் சர்மா  பேட்டிங் செய்தபோது மார்க்வுட் வீசிய பந்தில் வலது முழங்கையில் காயம் அடைந்தனர்.  வலியால் அவதிப்பட்ட அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டு தொடர்ந்து விளையாடினார். ஆனால் அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. இதேபோல் ஸ்ரேயாஸ் அய்யர் பந்தை தடுக்க பாய்ந்து விழுந்த போது இடது தோள்பட்டை தரையில் பலமாக இடித்தது. வலியால் துடித்த அவர் அத்துடன் களத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு காயத்தின் தன்மை அதிகமாக உள்ளதால் தொடரில் இருந்துவிலகி உள்ளார். இதேபோல் இங்கிலாந்து கேப்டன் மோர்கனும் பீல்டிங்கின் போது கையில் காயம் அடைந்தார்.  காயம் காரணமாக ரோகித்சர்மா, மோர்கன் அடுத்த ஆட்டத்தில்  விளையாடுவது கேள்வி குறிதான்.

பிட்ஸ்..
* இந்திய கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் தொடரில் முதல் முறையாக தொடரின்  முதல் போட்டியில் வென்றுள்ளது.
*  இங்கிலாந்துஅணி 2015ம் ஆண்டுக்கு பின் அதிகரன் வித்தியாசத்தில் (66) தோற்ற 2வது போட்டி இது தான்.
*  அறிமுக போட்டியில் அதிக விக்கெட்4/54) வீழ்த்திய வீரர்  என்ற சிறப்பை பிரசித் கிருஷ்ணா பெற்றார்.


Tags : India ,Virat Kohli , India win first ODI There are 2,3 players for each place in the batting line-up: Interview with Captain Virat Kohli
× RELATED நரேந்திர மோடி மைதானத்தில்...