×

தமிழகத்தில் 2020-ம் ஆண்டை நினைவூட்டும் கொரோனா: ஒரே நாளில் 1,636 பேர் பாதிப்பு: 12 பேர் பலி; 9,746 பேருக்கு சிகிச்சை; சுகாதாரத்துறை அறிக்கை.!!!

சென்னை: தமிழகத்தில் மேலும் 1,636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 71 ஆயிரத்து 440 (8,71,440) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,

* தமிழகத்தில் மேலும் 1,630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,71,440 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,023 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,49,064 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,630 ஆக உயர்ந்துள்ளது.
* அரசு மருத்துவமனையில் 06; தனியார் மருத்துவமனையில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 633 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,43,287 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 1,90,11,118 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 80,634 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் தற்போது 9,746 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,26,299 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 972 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,45,106 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 664 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 35 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 259 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 190.

* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
* கேரளா-2.
* மகாராஷ்டிரா-2.

* வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
* வங்க தேசம்-1.
* UAE-1.

Tags : Corona ,Tamil Nadu , Corona to mark 2020 in Tamil Nadu: 1,636 victims in one day: 12 killed; Treatment for 9,746 people; Health Department Report. !!!
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...