தமிழகம், மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது: ராஜேஷ் பூஷன் பேட்டி

டெல்லி: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நீடித்து வரும் கொரோனா தொற்று பரவல் கடந்த மாதம் வரை குறைந்து வந்தது. ஆனால், தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருவது மக்களை மீண்டும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, குஜராத், தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்றின் வேகம் தீவிரமாக உள்ளது. இதனால் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நாடு முழுவதும் கடந்த 10 நாட்களாக கொரோனா தினசரி தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்துச்வருகிறது. இந்நிலையில் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; மார்ச் 1-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, தஞ்சை, திருவாரூர், மாவட்டங்களில் சிகிச்சை பெறுவோர் அதிகமாக உள்ளனர். கொரோனா தாக்கம் அதிகம் இருக்க கூடிய முதல் 10 மாவட்டங்களில் புனே, நாக்பூர், மும்பை, தானே, நாசிக் மற்றும் பெங்களூரு இடம்பெற்றுள்ளன.

குஜராத்தில் மட்டும் 1,500 பேர் விகிதம் தினசரி தொற்று இருந்து வருகிறது. குஜராத்தில் அதிக பட்சமாக சூரத், அகமதாபாத், உள்ளிட்ட இடங்களில் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என கூறினார்.

Related Stories:

>