×

சிரமம் இன்றி ரெம்டெசிவிர் கிடைக்க நடவடிக்கை: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யும் மையங்களில் அலைமோதும் கூட்டத்தைத் தவிர்க்க அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த மருந்தினை விற்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மருந்து வாங்க வருபவர்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் அளவுக்கு இந்த மையங்களில் கூட்டம் அலை மோதுகிறது. இதனை உடனடியாக முறைப்படுத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தேவைப்படுவோர் அனைவருக்கும் எந்தவித சிரமமும் இன்றி ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், இம்மருந்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்….

The post சிரமம் இன்றி ரெம்டெசிவிர் கிடைக்க நடவடிக்கை: டிடிவி.தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : DTV ,Dinakaran ,Chennai ,Amadam ,Secretary General ,Twitter ,Remdesivir ,Remdecivir ,
× RELATED தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி...