சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொள்வது பற்றி பரிசீலிப்போம்: அதிமுக ஒருங்கிணைப்பார் பேட்டி

சென்னை: சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொள்வது பற்றி பரிசீலிப்போம் என்று துணைமுதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஆட்சி அமைவதற்காக அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலாவின் அறிவிப்பு அவருடைய பெருந்தன்மை என்று நினைப்பதாக அவர் கூறினார்.

சசிகலா மீது தனக்கு எப்போதும் தனக்கு வருத்தம் இருந்ததில்லை என்று கூறிய ஓபிஸ், அவர் மீது தற்போதும் நன்மதிப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதிமுகவில் சசிகலாவிற்கு இடம் இருக்கிறதாக என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் ஓபிஎஸ் ஜனநாய முறைப்படி இயங்கு ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்கிற கட்சியின் அமைப்பினை ஏற்றுக்கொண்டால் சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொள்வதற்க்கு பரிசீலிக்கலாம் என்று கூறியுள்ளார்.

Related Stories: