வீடு வீடாக சென்று தபால் வாகு படிவத்தை வழங்கும் வாகன சேவை தொடக்கம்: சிறப்பு தேர்தல் அதிகாரி பிரகாஷ் பேட்டி

சென்னை: வீடு வீடாக சென்று தபால் வாகு படிவத்தை வழங்கும் வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ரிப்பன் மாளிகையில் வாகன சேவையை சென்னை மாநகராட்சிஆணையர், சிறப்பு தேர்தல் அதிகாரி பிரகாஷ் தொடங்கி வைத்தார். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் தபால் வாக்குகளை அடையாளம் காண 70 வாகனங்கள் சேவையில் உள்ளது.

மேலும் ஒரு வாகனத்தில் 2 வாக்குப்பதிவு அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள், ஒளிப்பதிவாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பணிகளில் உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த ஏதுவாக அவர்களுக்கும் படிவம் வழங்கப்படுகிறது. 31ம் தேதிக்குள் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி முடிவடையும் என பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 7,300 பேர் தபால் வாக்கு கோரி விண்ணப்பித்துள்ளனர். சென்னையில் 1.20 லட்சம் பேருக்கு தபால் வாக்குக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. 12,000 பேர் தபால் வாக்கு விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர். நாளை முதல் வரும் 31ம் தேதி வரை தபால் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற உள்ளது என்று சிறப்பு தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>