×

இணக்கமான உறவையே விரும்புகிறோம்.. பாகிஸ்தானின் குடியரசு தினத்தை ஒட்டி, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்

டெல்லி: பாகிஸ்தானின் குடியரசு தினத்தை ஒட்டி, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த 2003ம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் அமைதி மற்றும் கட்டுப்பாடு நீடிக்க செய்ய இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்த புரிந்துணர்தலை கடைப்பிடிக்கும்படி தொடர்ந்து இந்தியா அந்நாட்டுக்கு வலியுறுத்தி வருகிறது. ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து இதனை மீறி வந்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இந்தியா பாகிஸ்தான் இடையே இணக்கமான சூழல் நிலவுவது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் பாகிஸ்தான் ராணுவம் தாமாகவே முன்வந்து, எல்லையில் அத்துமீறுவதில்லை என்ற 2003 ஒப்பந்தத்தை கடைபிடிக்கத் தொடங்கியது.கடந்த திங்கள்கிழமை, சிந்துநதி ஆணைய பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பாகிஸ்தான் உயர்மட்டக் குழு இந்தியா வந்தது. இதனிடையே பாகிஸ்தானின் குடியரசு தினத்தை ஒட்டி, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்.

அதில்; ஓர் அண்டை நாடக பாகிஸ்தானுக்கு இணக்கமான உறவையே இந்தியா விரும்புகிறது. ஆனால் இது நிறைவேற நம்பிக்கையான சூழல் அமைய வேண்டும். அதற்கு தீவிரவாதமும், வெறுப்பும் ஒழிக்கப்பட வேண்டும். கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொண்டு சமாளித்து வரும் இம்ரான் கானுக்கும், பாகிஸ்தான் மக்களுக்கும் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.


Tags : Modi ,Prime Minister of Pakistan ,Imran Khan ,Republic Day , We want a harmonious relationship .. Prime Minister Modi's congratulatory letter to Prime Minister Imran Khan on the occasion of the Republic Day of Pakistan
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு