×

வருட இறுதிவரை சென்றாலும் பரவாயில்லை.. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் : டெல்லியில் உறுதியாக நிற்கும் விவசாயிகள்!!

டெல்லி : டிசம்பர், நவம்பர் வரை போராட்டம் சென்றாலும் பரவாயில்லை; எக்காரணத்தை கொண்டும் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று டெல்லி விவசாயிகள் உறுதி பூண்டுள்ளார். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 118 நாட்களாக ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளான சிங்கு, டிகிரி, காசிப்பூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களின் மூலம் சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்பது குற்றச்சாட்டாகும். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் நினைவு நாள் நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. டெல்லியில் சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் நினைவு நாளை அனுசரித்த பஞ்சாப் விவசாயிகள், பகத் சிங் தூக்கில் போடப்பட்டதை நினைவு கூர்ந்து பேசினர். இந்த நிகழ்வில் பேசிய விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராகேஷ் திகாய்த், எங்களின் போராட்டம் தொடரும். எத்தனை நாட்கள் ஆனாலும் போராட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை . அனைத்திற்கும் தயாராகவே வந்து இருக்கிறோம். சட்டத்தை அரசு வாபஸ் வாங்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே கோரிக்கை. அதுவரை போராட்டம் தொடரும். டிசம்பர், நவம்பர் வரை போராட்டம் சென்றாலும் பரவாயில்லை. கண்டிப்பாக எங்களின் கோரிக்கையை விட்டுக்கொடுக்கும் எண்ணம் இல்லை. இந்தியா முழுக்க போராட்டத்தை கொண்டு செல்லும் முடிவில் நாங்கள் இருக்கிறோம்,என்றார்.


Tags : Delhi , Delhi, farmers, struggle, toll charges, loss
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு