வாலிபரை கொல்ல முயன்ற நண்பர்களுக்கு 10 ஆண்டு சிறை: செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நண்பனை சுத்தியலால் தாக்கி கொலை செய்ய முயன்ற 2 பேருக்கு 10 ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம் விதித்து சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்தவர் முகமது இக்பால், நாகப்பட்டினத்தை பூர்வீகமாக கொண்ட இவர், சென்னை பர்மா பஜாரில் வெளிநாட்டு பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு கோபிநாத் மற்றும் அமித் அம்ஜா  ஆகியோரின் நட்பு கிடைத்துள்ளது. மூவரும் சேர்ந்து தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், கோபிநாத், அமித் அம்ஜா ஆகியோருக்கு முகமது மீது தொழில் சம்மந்தமாக காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 27.6.2014 அன்று, அமித் ஆம்ஜா, கோபிநாத் ஆகியோர் முகமது இக்பாலை அழைத்து, நீ தொழிலே  செய்யக்கூடாது, ஒழிஞ்சுபோ என்று கூறி கொலை செய்யும் நோக்கில் தலையில் சுத்தியலால் தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை 6வது செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு  வழக்கறிஞர் டீக்ராஜ் ஆஜராகி வாதிட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, கோபிநாத், அமித் அம்ஜா மீதான கொலை முயற்சி வழக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம் விதித்து  உத்தரவிட்டார்.

Related Stories:

>