கொரோனா தாக்கம் இருப்பதால் சென்னை, கோவையில் மைக்ரோ தனிமைப்படுத்தப்பட்ட பகுதி திட்டம்: சுகாராத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்

சென்னை: உலக காசநோய் தினத்தையோட்டி  ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன். பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: காசநோயை 2025க்குள் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்  காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.  கொரோனாவின் தாக்கம் இருப்பதால், அனைவரும்  கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும், கூட்டமான நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், தள்ளுவண்டி கடைகளில் சாப்பிடும்போதும் இடைவெளி பின்பற்றி மாஸ்க் அணிய வேண்டும்.

சென்னை, கோவையில் இன்னும் பரிசோதனைகளை அதிகரித்து  மைக்ரோ தனிமைப்படுத்தப்பட்ட பகுதி திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். கொரோனா தடுப்பூசி மையங்களை அதிகரிக்க தேவை இருந்தால்  மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையருக்கு அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறோம். நேற்று  மட்டும் 1.5 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். ஒரே குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளது, குறிப்பாக ஆதம்பாக்கம், நங்கநல்லூர், கோடம்பாக்கம் ஆகிய 13 இடங்களில் கொரோனா இருப்பது   கண்டறியப்பபட்டுள்ளது”  என்றார்.

Related Stories:

>