சட்டீஸ்கரில் நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 போலீசார் சிதறி பலி

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் நக்சலைட்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் போலீசார் சென்ற பஸ் வெடித்து சிதறி 5 பேர் பரிதாபமாக இறந்தனர். சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கைக்குப் பின்னர் 20க்கும் மேற்பட்ட போலீசார் ஒரு பஸ்சில்  நாராயண்பூர் மாவட்டத்தை நோக்கி நேற்று திரும்பிக் கொண்டிருந்தனர். கன்ஹர்கான் மற்றும் கடேனர் கிராமங்களுக்கு  இடையேவந்த பஸ் போது, வாய்க்கால் பாலத்தின் மேலே நக்சலைட்டுகள் வைத்த கண்ணிவெடி வெடி தாக்குதலில் சிக்கி பஸ் வெடித்து  சிதறியது.  இதில் டிரைவர் உட்பட 5 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.தகவலிருந்த மீட்பு  படையினர் விரைந்து வந்து காயமடைந்த போலீசாரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாநில போலீசாரின் நக்சல் எதிர்ப்பு படைக்கு எதிராக கடந்த ஓராண்டில் நடத்தப்பட்ட 2வது பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>