×

பொய் வழக்குகளால் பாதித்தோருக்கு இழப்பீடு மத்திய அரசுக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பொய் வழக்கால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும், போலி கிரிமினல் வழக்கு தொடர்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற வழக்குகளில் மத்திய  அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது. உத்தர பிரதேசத்தில் கடந்த ஜனவரியில் பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளியை நிரபராதி என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து விடுவித்தது. நிலத்தகராறு காரணமாக அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டது ஆதாரப்பூர்வமாக  நிரூபிக்கப்பட்டதால் அந்த நபரை நீதிமன்றம் விடுத்தது. ஆனால், தீர்ப்பளிக்கப்படும் சமயத்தில், அந்த நபர் தனது 20 ஆண்டுகால சிறை தண்டனையை அனுபவித்தே முடித்திருந்தார்.

இந்த சம்பவத்தை காட்டி, பாஜ தலைவர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘பொய் வழக்கால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு தனது அரசியலமைப்பு அதிகாரத்தை  பயன்படுத்தி வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்,’ என கூறியிருந்தார். இதே போல், கபில் மிஸ்ரா தாக்கல் செய்த வழக்கில், ‘போலி கிரிமினல் வழக்கு தொடரும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கூறியிருந்தார். இவ்விரு வழக்குகள் நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.




Tags : Notice to Central Government Compensation for Victims of False Cases: Supreme Court Order
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...