இலங்கையுடன் முதல் டெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை

நார்த் சவுண்ட்: இலங்கை அணியுடனான முதல் டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 102 ரன் முன்னிலை பெற்றது. ஆன்டிகுவா, ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசிய நிலையில், இலங்கை முதல் இன்னிங்சில் 169 ரன்னுக்கு சுருண்டது. திரிமன்னே 70 ரன், டிக்வெல்லா 32 ரன் எடுத்தனர்.  வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர் 5 விக்கெட் கைப்பற்றினார். முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன் எடுத்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 2ம் நாளில் நிதானமாக விளையாடி ரன் குவித்தது.

அந்த அணி 2ம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 268 ரன் எடுத்தது. கேம்பெல் 42, போன்னர் 31, மேயர்ஸ் 45, ஹோல்டர் 19, ஜோஷுவா 46 ரன் எடுத்தனர். கார்ன்வால் 60 ரன், ரோச் 4 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை  தொடங்கினர். கார்ன்வால் மேற்கொண்டு 1 ரன் எடுக்க, கேப்ரியல் டக் அவுட்டானார். வெஸ்ட் இண்டீஸ் 103 ஓவரில் 271 ரன் எடுத்து முதல் இன்னிங்சை இழந்தது. ரோச் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை பந்துவீச்சில் லக்மல்  5, விஷ்வா, சமீரா தலா 2, எம்புல்டெனியா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 102 ரன் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடியது.

Related Stories:

>